அரசு கால்நடை துறை சார்பில் டி.என் பாளையம் பகுதியில் நடைபெற்ற கால்நடை மலட்டு தன்மை நீக்க சிறப்பு சிகிச்சை முகாம்..
ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணைந்து மணவெளி சட்டமன்ற தொகுதி டி.என் பாளையம் பகுதியில் கால்நடை மலட்டு தன்மை நீக்க சிறப்பு சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
இந்த கால்நடை சிறப்பு சிகிச்சை முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,சட்டப்பேரவை தலைவருமான செல்வம் தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் குமரவேல் தலைமையில் கால்நடைகளுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் மாடுகள் ஆடுகளுக்கு மலட்டு தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம் ,சினை பரிசோதனை மற்றும் பொது சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
No comments